TNPSC Thervupettagam

உலகளாவியப் பணப் பரிமாற்றம் 2024

December 23 , 2024 2 days 61 0
  • இந்தியா தனது புலம்பெயர்ந்த இந்தியர்களிடமிருந்து அதிகபட்சமாக 129 பில்லியன் டாலர் மதிப்பிலான பண வரவுகளைப் பெற்ற நாடு என்ற அளவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் பண வரவு மட்டும் கிட்டத்தட்ட பாகிஸ்தான் (சுமார் 67 பில்லியன் டாலர்) மற்றும் வங்காளதேசம் (68 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகளின் வருடாந்திர வரவு செலவு (பட்ஜெட்) தொகைகளை விட கூடுதல் தொகையாகும்.
  • மிகவும் அதிக பண வரவு கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மெக்ஸிகோவை விட இது கிட்டத்தட்ட இருமடங்காகும்.
  • சுமார் 68 பில்லியன் டாலர்களுடன் மெக்சிகோ இரண்டாவது இடத்தைப் பிடித்து உள்ள நிலையில் 48 பில்லியன் டாலர்களுடன் சீனா மூன்றாவது இடத்தையும், 40 பில்லியன் டாலர்களுடன் பிலிப்பைன்ஸ் நான்காவது இடத்தையும், 33 பில்லியன் டாலர்களுடன் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தையும் இதில் பிடித்தன.
  • 2020 ஆம் ஆண்டினைத் தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஒவ்வோர் ஆண்டும் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பண வரவினைப் பெறுகிறது.
  • கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் ஒட்டு மொத்தப் பண வரவு 57 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
  • மொத்தத்தில், 2014 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியா பண வரவு மூலமாக மட்டும் சுமார் 1 டிரில்லியன் டாலர்களை (982 பில்லியன் டாலர்) பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்