ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு அமைப்பினால் சமீபத்திய உலகளாவியப் பல் பரிமாண வறுமைக் குறியீட்டு (MPI) அறிக்கையானது வெளியிடப் பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, 1.1 பில்லியன் மக்கள் உலகளவில் மிக கடுமையான வறுமை நிலையில் வாழ்கின்ற நிலையில் இவர்களில் மிகவும் பாதிக்கும் மேற்பட்டோர் சிறார்கள் ஆவர்.
இந்தியாவில் 234 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் என்பதோடு இது நடுத்தர மனித மேம்பாட்டுக் குறியீடு நிலை ஆகும்.
உலகளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வறுமையில் வாடும் நிலையில் உள்ள ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
மற்ற நான்கு நாடுகள் பாகிஸ்தான் (93 மில்லியன்), எத்தியோப்பியா (86 மில்லியன்), நைஜீரியா (74 மில்லியன்) மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு (66 மில்லியன்) ஆகியனவாகும் என்பதோடு இவை அனைத்தும் மிக குறைவான மனித மேம்பாட்டுக் குறியீடு கொண்ட நாடுகள் ஆகும்.
உலகிலுள்ள ஏழைகளில் 48.1% பேர் இந்த ஐந்து நாடுகளில் வாழ்கின்றனர்.
1.1 பில்லியன் ஏழைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் (584 மில்லியன்) என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
உலகளவில், 27.9 சதவீதக் குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர் என்பதோடு இளம் பருவத்தினர் மத்தியில் இது 13.5 சதவீதமாக உள்ளது.
தெற்காசியாவில் ஏழ்மை நிலையில் உள்ள 272 மில்லியன் குறைந்த பட்சம் ஒரு ஊட்டச் சத்து குறைபாடுள்ள நபர் கொண்ட வீடுகளிலும், ஏழ்மை நிலையில் உள்ள சுமார் 256 மில்லியன் மக்கள் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளிலும் வாழ்கின்றனர்.
ஏழ்மை நிலையில் உள்ள சுமார் 83.7 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.