உலகப் பொருளாதார மன்றமானது 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவியப் பாலின இடைவெளி அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்தத் தரவரிசையில் இந்தியாவின் நிலை 28 இடங்கள் கீழ் சென்றுள்ளது.
இக்குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 156 நாடுகளில் இந்தியா 140வது இடத்தில் உள்ளது.
இத்துடன் இந்தியாவானது தெற்காசியாவின் மூன்றாவது மோசமான நிலையிலுள்ள நாடு எனும் நிலையை அடைந்துள்ளது.
மேலும் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்பு ஆகிய துணைக் குறியீட்டிலும் சரிவைக் கண்டுள்ளது.
இந்தப் பரிமாணங்களில் இந்தியாவின் பாலின இடைவெளி இந்த ஆண்டில் 3% விரிவடைந்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இது இந்நாள் வரையில் 32.6% என்ற அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
2019 ஆம் ஆண்டில் 23.1% ஆக இருந்த பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 9.1% ஆக குறைந்துள்ளது.
பெண் தொழிலாளர் பங்கேற்பு வீதம் 24.8% என்ற அளவிலிருந்து 22.3% என்ற அளவிற்குக் குறைந்ததும் இந்தியாவைப் பின்னடைவிற்கு இட்டுச் சென்ற காரணிகளில் ஒன்று ஆகும்.
தொழில்முறை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பெண்களின் பங்கு 29.2% என்ற அளவாக குறைந்துள்ளது.
உயர்மட்டப் பணி நிலை மற்றும் மேலாண்மை நிலைகளிலும் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது.
இவற்றுள் 14.6% என்ற அளவிற்கு மட்டுமே பெண்கள் பொறுப்பு வகிக்கின்றனர்.
மேலும் 8.9% நிறுவனங்கள் மட்டுமே உயர்மட்ட அளவில் பெண் மேலாண்மை அதிகாரிகளைக் கொண்டு இயங்குகின்றன.
இந்தியாவில் பெண்கள் ஈட்டும் வருவாய் ஆண்களின் வருவாயில் 1/5 பங்கு மட்டுமே உள்ளது.
இதுவே உலகளாவிய பாலினக் குறியீட்டில் இந்தியா கடைசி 10 இடங்களில் இருப்பதற்குக் காரணமாகும்.
குறிப்பு
இந்தியாவின் அண்டை நாடுகளில் நேபாளம் 106வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 156வது இடத்திலும், பாகிஸ்தான் 153வது இடத்திலும், இலங்கை 116வது இடத்திலும் மற்றும் பூடான் 130வது இடத்திலும் உள்ளன.
இந்தப் பகுதிகளில் ஒட்டு மொத்த பாலின இடைவெளியானது 62.3% என்ற அளவிற்கு உள்ளது.
தெற்காசியப் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகள் மட்டுமே இந்தியாவைக் விட குறைவான தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.
12வது முறையாக ஐஸ்லாந்து ஆனது இந்தக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது.
2020 ஆம் ஆண்டில் 153 நாடுகளுள் இந்தியா 112வது இடத்தில் இருந்தது.