உலகளாவியப் புத்தாக்கக் குறியீடு 2024
October 2 , 2024
52 days
173
- ஜெனீவா நகரில் உள்ள உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு ஆனது இந்த முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- 2024 ஆம் ஆண்டு உலகப் புத்தாக்கக் குறியீட்டில் (GII) இந்தியா 39 வது இடத்தைப் பிடித்துள்ளது.
- இந்தியா தற்போது 38 குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுள் முதல் இடத்தில் உள்ளது.
- சுமார் 133 உலக நாடுகளின் புத்தாக்க செயல்திறனை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.
- 2015 ஆம் ஆண்டில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது.
- உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் (WIPO) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (S&T) தொகுப்பு தரவரிசையில் இந்தியா 4வது இடத்தையும் பெற்றுள்ளது.
- இதில் சீனா 11வது இடத்தைப் பெற்று, முதல் 30 இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரமாக உள்ளது.
- சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன.
Post Views:
173