பெருங்கடல் கணக்கெடுப்பு எனப்படுகின்ற ஒரு புதிய முன்னெடுப்பானது ஒரு தசாப்தத்திற்குள் சுமார் 100,000 புதிய கடல் இனங்களைக் கண்டறிந்து கடல் பல்லுயிர்த் தன்மை சார்ந்தத் தகவல் அறிவினை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆர்க்டிக் பகுதியில் உள்ள பேரண்ட்ஸ் கடல் பகுதியில், அறிவியலாளர்கள் குழு ஒன்று ஆய்வுக் கப்பல் மூலம் ஆய்வுப் பயணம் மேற்கொண்டது.
ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன் மற்றும் இதர வாயுக்கள் குமிழியாக வெளியேறும் கடல் பரப்பில் உள்ள விரிசல்கள் - பனிக்கட்டி கசிவுப் பகுதியினைச் சுற்றி காணப்படும் புதிய கடல் இனங்களைக் கண்டுபிடிப்பதை அக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுவரை அறியப்படாத கடல்வாழ் உயிரினங்களை கண்டறிவதற்காக என்று ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த நிப்பான் அறக்கட்டளை மற்றும் ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்த நெக்டன் அறக்கட்டளை ஆகியவற்றினால் இணைந்து இது நிறுவப்பட்டது.
சுமார் 10% கடல் இனங்கள் மட்டுமே முறையாக விவரிக்கப்பட்டுள்ளன என்றும், சுமார் 2 மில்லியன் இனங்கள் இன்னும் அடையாளம் காணப் படவில்லை என்றும் அறிவியல் அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர்.