உலக வங்கியானது 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவியப் பொருளாதார வாய்ப்பு என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன் முன்கணிப்பின்படி, உலக நாடுகளானவை 2.5% என்ற விகிதத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
வளரும் நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் சந்தைகள் குறித்த அறிக்கையின்படி அவற்றின் வளர்ச்சியானது அதிகரிக்குமே அன்றி மற்றவற்றின் வளர்ச்சியானது (மற்ற நாடுகள்) அதிகரிக்காது.
இந்த அறிக்கையின் படி தெற்காசியாவின் வளர்ச்சியானது 2020 ஆம் ஆண்டில் 5.5% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்த அறிக்கையானது இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 5% என்று கணித்துள்ளது. மேலும் அடுத்து வரும் ஆண்டில் இந்தியா 5.5% வளர்ச்சி விகிதத்தை அடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வளர்ச்சியானது 1.8% ஆக அதிகரிக்கும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சியானது 1% என்ற அளவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.