TNPSC Thervupettagam

உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள்

January 16 , 2023 549 days 242 0
  • உலக வங்கியானது, அதன் சமீபத்திய உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள் என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • உலகப் பொருளாதாரம் ஆனது, 2023 ஆம் ஆண்டில் 1.7% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 2.7% ஆகவும் வளர்ச்சி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில், வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் உள்ள தனி நபர் வருமான வளர்ச்சியானது சராசரியாக 2.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் உள்ள தனிநபர் வருமான வளர்ச்சி சராசரியாக 1.2% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் 2.5% ஆக உள்ள வளர்ச்சி பெற்ற பொருளாதாரங்களின் வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டில் 0.5% ஆக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டின் இறுதியில், புதிதாக உருவாகி வரும் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுகள் தொற்றுநோய்க்கு முன்பு எதிர்பார்க்கப்பட்ட அளவை விட தோராயமாக 6% குறைவாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்