வீழ்ச்சி நிலையில் இருந்து 2021 ஆம் ஆண்டில் 6.2 சதவீதத்திற்கு உயர்ந்த பிறகு, உலக வங்கியின் உலக வளர்ச்சி மதிப்பீடுகள் 2022 ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டில் 2.6 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடுகிறது.
2025 ஆம் ஆண்டில் 2.7 சதவீதமாக உயரும் முன், 2024 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் 2.4 சதவீதமாகக் குறையும் என தற்போது கணித்து உள்ளது.
இது 2010 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட 3.1 சதவீத சராசரி வளர்ச்சியை விட மிகவும் குறைவாக உள்ளது.
பெரும்பாலான நாடுகள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் COVID-19 பெருந் தொற்றிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மெதுவான வளர்ச்சி விகிதத்தில் வளரும்.
2023-24 ஆம் ஆண்டில் 6.3 சதவீதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சியானது 2024-25 ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும், 2025-26 ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும் உயர்ந்து வருகிறது.