TNPSC Thervupettagam

உலகளாவியப் போக்குகள் அறிக்கை: 2023 ஆம் ஆண்டில் பதிவான கட்டாய புலம் பெயர்வு

June 18 , 2024 158 days 163 0
  • 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை உலகளவில் 120 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக புலம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின் (UNHCR) உலகளாவியப் போக்குகள் அறிக்கையில் இந்தப் புதிய தரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 117.3 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயம் காரணமாக புலம்பெயர்ந்துள்ளனர்.
  • மே மாதத்தில் உலகளவில் சுமார் 120 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்ற நிலையில் இது 2022 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களை விட சுமார் 10% அதிகமாகும்.
  • இது உலக மக்கள் தொகையில் சுமார் 1.5% ஆகும்.
  • இந்த ஆண்டு, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து 12வது ஆண்டாக, 114 முதல் 120 மில்லியனாக அதிகரித்துள்ளது.
  • வெறும் ஐந்து நாடுகளில் அதிக புதிய புகலிட கோரல் விண்ணப்பங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்ற நிலையில் அவற்றுள் 1.2 மில்லியன் விண்ணப்பங்களுடன் மிகவும் பெரும்பாலானவை அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • அதைத் தொடர்ந்து 329,100 பதிவுகளுடன் ஜெர்மனியும் அதனைத் தொடர்ந்து எகிப்து, ஸ்பெயின் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்