அனைவருக்கும் நிலையான போக்குவரத்து (Sustainable Mobility for All - SuM4All) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, போக்குவரத்துத் துறையில் ‘நிலைத் தன்மையை’ அடைவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals - SDGs) அடைவதற்கும் எந்தவொரு நாடும் (வளர்ந்த அல்லது வளரும்) அதற்குரிய பாதையில் செயல்படவில்லை.
SuM4All என்பது SDGகளை செயல்படுத்துவதிலும் போக்குவரத்துத் துறையை மாற்றுவதிலும் கவனம் செலுத்துகின்ற ஒரு முதன்மை அமைப்பாகும் (பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளடங்கியது).
போக்குவரத்துத் துறையால் ஏற்படும் மாசுபாட்டைப் பாதியாகக் குறைப்பது கூடுதலாக 1.6 பில்லியன் மக்களுக்குத் தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கு உதவும் என்றும் அது கூறுகின்றது.
மேலும் இந்த அறிக்கையானது நடவடிக்கைக்கான உலகளாவிய செயல்திட்டத்தையும் (Global Roadmap for Action - GRA) வெளியிட்டுள்ளது.
GRA என்பது நான்கு கொள்கை இலக்குகளை அடைவதற்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு, சோதிக்கப்பட்ட கொள்கை நடவடிக்கைகளின் ஒரு பட்டியலாகும்.