TNPSC Thervupettagam

உலகின் 100 மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள்

December 14 , 2018 2078 days 619 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான உலகின் 100 மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 4 இந்தியர்கள்,
    • தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நம்பிக்கை நட்சத்திர பெண்மணியான ரோஷினி நாடார் மல்கோத்ரா (51-வது இடத்தில்)
    • உயிரித் தொழில்நுட்பவியலில் முன்னோடியான கிரண் மசும்தார் ஷா (60-வது இடத்தில்)
    • ஊடகவியலாளரான ஷோபனா பாரதியா (88-வது இடத்தில்) மற்றும்
    • நடிகை பிரியங்கா சோப்ரா (94வது இடத்தில்)
  • இந்த பட்டியலின் 15-வது பதிப்பில் ஜெர்மனியின் அதிபரான ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துள்ளார். இவர் மொத்தம் 13 முறை இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • இவருக்கு அடுத்து ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதமரான தெரசா மே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தொடர்ந்து 2-வது முறையாக இந்த இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • 2018 ஆம் ஆண்டிற்கான பட்டியல் 6 தலைமுறைகளைத் தாண்டி இருக்கும் செல்வாக்குள்ள பெண்களைக் கொண்டு இருந்தது.
    • டெய்லர் சிப்ட் - 28வது வயதில் கௌரவிக்கப்பட்ட மிக இளைய வயது பெண்மணி (68-வது இடத்தில்)
    • அரசி எலிசபெத் II - 92-வது வயதில் கௌரவிக்கப்பட்ட மிக மூத்த வயது பெண்மணி (23-வது இடத்தில்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்