TNPSC Thervupettagam

உலகின் 10வது பரபரப்பான விமான நிலையம்

October 29 , 2022 759 days 390 0
  • உலகின் முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் ஆனது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொத்தப் போக்குவரத்து எண்ணிக்கையைப் பயன்படுத்தி தயாரிக்கப் பட்டது.
  • அக்டோபர் மாதத்தில் தேசியத் தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமானது, உலகின் 10வது பரபரப்பான விமான நிலையமாக உருவெடுத்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 14வது இடத்திலிருந்த டெல்லி விமான நிலையம் தற்போது 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக விமானப் பகுப்பாய்வு நிறுவனமான OAG தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமாக விளங்குகிறது.
  • அட்லாண்டாவிற்கு அடுத்தபடியாக துபாய் மற்றும் டோக்கியோ ஹனேடா விமான நிலையங்கள் ஆகியவை முறையே 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.
  • இந்த அறிக்கையின்படி, துபாய் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக விளங்குகிறது.
  • அதைத் தொடர்ந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் ஆகியவை முறையே 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.
  • முதல் 10 பரபரப்பான சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலில் இந்திய விமான நிலையம் எதுவும் இடம் பெறவில்லை.
  • முதல் 10 பரபரப்பான சர்வதேச வழித்தடங்களில் மும்பை முதல் துபாய் மற்றும் டெல்லி முதல் துபாய் ஆகிய வழித் தடங்கள் அடங்கும்.
  • மும்பை மற்றும் நியூயார்க்கிற்கு இடையேயான பாதை, இதுவரை விமானச் சேவை மேற்கொள்ளப் படாத மிகப்பெரிய வழித்தடங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்