2014-15 ஆம் ஆண்டில் நான்காவது பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளர் நாடாக இருந்த இந்தியா 2022-23 ஆம் ஆண்டில் இரண்டாவது பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளர் நாடாக மாறியுள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் சுமார் 6.02 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 6.72 மெட்ரிக் டன் எஃகு ஏற்றுமதியினை மேற்கொண்டு, நிகர எஃகு ஏற்றுமதியாளர் நாடாக இந்தியா திகழ்கிறது.
2022-23 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்தச் செயல்முறையாக்கப்பட்ட எஃகு உற்பத்தி 122.28 மெட்ரிக் டன் ஆகும்.
2014-15 ஆம் நிதியாண்டில் இருந்த 81.86 மெட்ரிக் டன்கள் என்ற அளவுடன் ஒப்பிடச் செய்கையில் இது 49% அதிகமாகும்.