TNPSC Thervupettagam

உலகின் 3வது பணக்காரர்

August 31 , 2022 692 days 363 0
  • அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உலகின் 3வது பணக்காரர் ஆனார்.
  • இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் LVMH நிறுவனத்தின் இணை நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை முந்தியுள்ளார்.
  • இந்தப் பெருமையைப் பெற்ற முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர் இவரே ஆவார்.
  • அவரது சொத்துகளின் மொத்த நிகர மதிப்பு 137.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.
  • அதானி குழுமம் இந்திய நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி வர்த்தக நிறுவனமும் ஆகும்.
  • அதானி தற்போது ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டுத் தரவரிசையில் எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக பின்தங்கியுள்ளார்.
  • முன்னதாக, இந்தியாவின் முகேஷ் அம்பானி மற்றும் சீனாவின் ஜாக் மா ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பெற முயற்சி செய்திருந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்