TNPSC Thervupettagam

உலகின் 6வது மிகப்பெரிய பொருளாதாரம்

December 29 , 2020 1429 days 708 0
  • இது பொருளாதார மற்றும் வர்த்தக ஆராய்ச்சிக்கான மையத்தினால் வெளியிடப்பட்ட ஒரு வருடாந்திர அறிக்கையாகும்.
  • இந்தியாவானது 2025 ஆம் ஆண்டில் உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்தியா மீண்டும் ஐக்கியப் பேரரசைப்  பின்னுக்குத் தள்ள இருக்கின்றது.
  • இந்தியாவானது ஐக்கியப் பேரரசைப் பின்னுக்குத் தள்ளி 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவடுத்தது.
  • ஆனால் இந்தியா 2020 ஆம் ஆண்டில் மீண்டும் 6வது இடத்திற்குச் சென்றது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2018 ஆம் ஆண்டில் 6.1லிருந்து 2019 ஆம் ஆண்டில் 4.2% ஆகக் குறைந்தது.
  • இந்தியாவானது 2030 ஆம் ஆண்டில் 3வது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • சீனாவானது 2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்