பிளாக்செயின் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான செயினலிசிஸ், 2022 ஆம் ஆண்டிற்கான உலக இணைய சங்கேதப் பண ஏற்புக் குறியீட்டினை வெளியிட்டது.
மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா (MENA) பிராந்தியத்தில் பெறப்பட்ட இணைய சங்கேதப் பணத்தின் அளவு 48 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்தக் குறியீடு வெளிப்படுத்தியது.
இது உலகிலேயே மிக உயர்ந்த அளவாகும்.
2021 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு இடையில் 566 பில்லியன் மதிப்புள்ள இணைய சங்கேதப் பணமானது பெறப்பட்டது.
மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா (MENA) பிராந்திய நாடுகளில் இணைய சங்கேதப் பணத்தின் அதிக மதிப்பைப் பெற்றுள்ளதன் மூலம் துருக்கி தற்போது முதலிடத்தில் உள்ளது.
மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா (MENA) பிராந்திய நாடுகளுக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்க நாடுகள் இரண்டாவது பெரிய இணைய சங்கேதப் பண வளர்ச்சியைக் கண்டது
இது 40 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.
அதைத் தொடர்ந்து வடக்கு அமெரிக்கா 36 சதவீத வளர்ச்சியையும், மத்திய ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் ஓசியானியா 35 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளன.
மூன்று மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா (MENA) பிராந்திய நாடுகள் - துருக்கி, எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இந்தக் குறியீட்டில் முதல் 30 இடங்களில் இடம் பெற்றுள்ளன.