உலகின் அதிவேக வரைகலைக்கான சக்தி வாய்ந்த நேரடி அணுகல் நினைவகச் சில்லுகள்
July 22 , 2022 861 days 437 0
சாம்சங் நிறுவனமானது அதிவேகமான மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆற்றல் திறன் கொண்ட ஒரு புதிய வரைகலைக்கான சக்தி வாய்ந்த நேரடி அணுகல் நினைவகச் சில்லுகளை உருவாக்கியுள்ளது.
புதிய DRAM சில்லுகள் வினாடிக்கு 1.1 டெராபைட் வேகத்தில் வரைகலை படங்களைச் செயலாக்கும் திறன் கொண்டது.
சாம்சங், இதனை உலகிலேயே அதிவேகமானது என்றும், ஒரு நொடியில் 275 முழு உயர்தெளிவு கொண்டத் திரைப்படங்களைச் செயல்முறையாக்குவதற்கு ஈடான ஒரு திறன் உடையது என்றும் குறிப்பிடுகிறது.
வரைகலை DRAM சில்லுகளானது அதிக ஆற்றல் கொண்ட முப்பரிமாண விளையாட்டுச் செயலிகள், கணினி அல்லது கணினிக் குறிப்பேடுகள் அல்லது உயர் தெளிவுத் திறனுடன் கூடிய ஒளிப்படக் காட்சிகளைக் காட்சிப்படுத்தும் சாதனங்கள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.