ஏப்ரல் 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார கண்ணோட்டத்தின் படி, இந்தியா தற்போது $2.6 டிரில்லியனுடன் (GDPயில்) ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முன்னால் பிரான்சு ஆறாவது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் ஐந்து பொருளாதார நாடுகள்: அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து.
சர்வதேச நாணய நிதியத்தின் படி, 2018 இல்4% என்ற அளவிலும் 2019 இல் 7.8% என்ற அளவிலும் இந்தியா பொருளாதார வளர்ச்சியைக் கண்டு உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.