TNPSC Thervupettagam

உலகின் ஆழமான கடல் துளை

May 4 , 2024 203 days 330 0
  • இலத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் உலகின் மிக ஆழமான (கடல்) நீலத் துளையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 1,380 அடி அல்லது 420 மீட்டர் கீழே சென்றுள்ளனர், ஆனால் அது அந்தத் துளையின் முடிவு அல்ல.
  • டாம் ஜா’ கடல் துளை (TJBH) எனப்படும் இதுவரை அறியப்பட்ட "ஆழமான கடல் துளை", யுகடன் தீபகற்பத்தில் உள்ள சேதுமால் விரிகுடாவில் அமைந்துள்ளது.
  • இதன் ஆழத்தினை சிகாகோவில் உள்ள டிரம்ப் கோபுரத்தின் உயரத்துடன் ஒப்பிடச் செய்ய லாம்.
  • கடல் துளைகள் என்பது நீர் நிரப்பப்பட்ட செங்குத்துக் குகைகளாகும் என்பதோடு, அவை சுண்ணாம்பு, பளிங்கு அல்லது ஜிப்சம் போன்ற கரையக் கூடிய பொருட்களால் ஆன பாறைக் கட்டமைப்பு உள்ள கரையோரப் பகுதிகளில் காணப்படும்.
  • கடல் துளைகளில் பொதுவாக நன்னீர், உப்பு அல்லது கலப்பு கட்டமைப்பில் உள்ள ஓத அலையின் தாக்கம் கொண்ட தண்ணீர் காணப்படும்.
  • இதற்கான நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டுகள் தென் சீனக் கடலில் உள்ள டிராகன் துளை மற்றும், மாபெரும் கடல் துளை மற்றும் கரீபியனில் உள்ள டீனின் கடல் துளை ஆகியனவாகும்.
  • எகிப்தில் உள்ள தஹாப் கடல் துளை மற்றும் பெலிஸில் உள்ள  மாபெரும் கடல் துளை ஆகியவை மற்ற உதாரணங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்