இலத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் உலகின் மிக ஆழமான (கடல்) நீலத் துளையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 1,380 அடி அல்லது 420 மீட்டர் கீழே சென்றுள்ளனர், ஆனால் அது அந்தத் துளையின் முடிவு அல்ல.
டாம் ஜா’ கடல் துளை (TJBH) எனப்படும் இதுவரை அறியப்பட்ட "ஆழமான கடல் துளை", யுகடன் தீபகற்பத்தில் உள்ள சேதுமால் விரிகுடாவில் அமைந்துள்ளது.
இதன் ஆழத்தினை சிகாகோவில் உள்ள டிரம்ப் கோபுரத்தின் உயரத்துடன் ஒப்பிடச் செய்ய லாம்.
கடல் துளைகள் என்பது நீர் நிரப்பப்பட்ட செங்குத்துக் குகைகளாகும் என்பதோடு, அவை சுண்ணாம்பு, பளிங்கு அல்லது ஜிப்சம் போன்ற கரையக் கூடிய பொருட்களால் ஆன பாறைக் கட்டமைப்பு உள்ள கரையோரப் பகுதிகளில் காணப்படும்.
கடல் துளைகளில் பொதுவாக நன்னீர், உப்பு அல்லது கலப்பு கட்டமைப்பில் உள்ள ஓத அலையின் தாக்கம் கொண்ட தண்ணீர் காணப்படும்.
இதற்கான நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டுகள் தென் சீனக் கடலில் உள்ள டிராகன் துளை மற்றும், மாபெரும் கடல் துளை மற்றும் கரீபியனில் உள்ள டீனின் கடல் துளை ஆகியனவாகும்.
எகிப்தில் உள்ள தஹாப் கடல் துளை மற்றும் பெலிஸில் உள்ள மாபெரும் கடல் துளை ஆகியவை மற்ற உதாரணங்களாகும்.