TNPSC Thervupettagam

உலகின் ஆழான ஏரிக்கு ஆபத்து

October 20 , 2017 2463 days 834 0
  • உலகில் ஐந்தில் ஒரு பங்கு உறைந்திடாத நன்னீரை தேக்கி வைத்திருக்கும் உலகின் ஆழமான ஏரியான ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள “பைகால் ஏரி” வரலாற்றின் மிக மோசமான நெருக்கடியைச் சந்தித்து கொண்டுள்ளது.
  • பைகால் ஏரி பரிணமிப்பு அறிவியலுக்கு தனித்தன்மையான மதிப்புடைய ஓர் இயற்கை அதிசயமாகும். இந்த ஏரி உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • சல்மன் மீன் குடும்பத்தைச் சேர்ந்த “ஓமுல் மீன்” உலகில் பைகால் ஏரியில் மட்டும் இருக்கும் மீன் வகையாகும். ஏரியில் இயற்கைக்கு மாறாக உருவாகும் அழுகிய பாசிகளின் பெருக்கம் மற்றும் வர்த்தக நோக்கம் உடைய மீன்பிடிப்புகள் இம்மீன்களில் மீளாத எண்ணிக்கை குறைவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதால் இந்த ஏரியில் இரஷ்ய அரசு மீன்பிடித் தடையை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்