உலகின் இடம்பெயர்ந்த உயிரினங்களின் நிலை குறித்த அறிக்கை
March 4 , 2024 265 days 320 0
இடம் பெயர்ந்த உயிரினங்களின் வளங்காப்பு தொடர்பான உடன்படிக்கையில் (CMS) பட்டியலிடப்பட்ட இனங்களில் 44 சதவீத (520 இனங்கள்) இனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றன.
ஐந்தில் ஒரு CMS இனங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.
CMS உடன்படிக்கையின் கீழ் பட்டியலிடப்பட்ட 97 சதவீத இடம் பெயர்ந்த மீன் இனங்கள் அழிந்து போகும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.
இந்த மீன் இனங்கள் சராசரியாக கடந்த 50 ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் அதிக சரிவைக் கண்டுள்ளன.
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் மொத்த மீன் வகைகளில் 28 இனங்கள் 'அருகி வரும் இனங்கள்' என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
முதலாவது பிற்சேர்க்கையில் சேர்க்கப்பட்டுள்ள 82 சதவீதம் (பட்டியலிடப்பட்ட 180 இனங்களில் 142) இனங்கள் அழிந்து விடும் அபாயத்தினை எதிர்கொள்கின்றன.
76 சதவிகித (137 இனங்கள்) இனங்களில் எண்ணிக்கை சரிவு பதிவாகியுள்ளது.
இரண்டாவது பிற்சேர்க்கையில் சேர்க்கப்பட்டுள்ள இனங்களில் 18 சதவிகிதம் அழியும் நிலையை எதிர்கொள்கின்றன மற்றும் சுமார் 42 சதவிகித (477 இனங்கள்) இனங்களில் எண்ணிக்கையில் சரிவுப் போக்குகள் பதிவாகியுள்ளன.
4,508 இனங்கள் இடம் பெயர்ந்ததாகக் கருதப்படுகின்றன.
இவற்றில் 3,339 (74 சதவீதம்) இனங்கள் தற்போது CMS பிற்சேர்க்கையில் பட்டியலிடப் படவில்லை.
CMS பட்டியலில் இடம் பெறாத 3,339 இனங்களில், 277 (எட்டு சதவீதம்) இனங்கள் ‘உலகளவில் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனமாகக்’ கருதப்படுகின்றன.
மேலும் 122 இனங்கள் (நான்கு சதவீதம்) 'அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்' ஆக வகைப்படுத்தப் பட்டுள்ளன.