TNPSC Thervupettagam

உலகின் இரண்டாவது பனிப்புகைக் கோபுரம்

October 15 , 2020 1412 days 642 0
  • தில்லி அரசானது காற்று மாசுபாட்டைக் கையாளுவதற்காக கன்னாட்என்ற இடத்தில்பனிப் புகைக் கோபுரத்தைஅமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • சீனாவிற்குப் பிறகு ஏற்படுத்தப்படும் 2வது பனிப்புகைக் கோபுரம் இதுவாகும். மேலும் உலகில் இதே வகையைச் சேர்ந்த முதலாவது கோபுரம் இதுவாகும்.
  • கன்னாட் என்ற இடத்தில் அமையவிருக்கும் இந்தக் கோபுரத்தின் தொழில்நுட்பமானது சீனாவில் உள்ளதை விட வேறுபட்டுள்ளது.
  • பனிப் புகைக் கோபுரங்கள் காற்று மாசுபாட்டுத் துகள்களைக் குறைப்பதற்காக வேண்டி மிகப்பெரிய அளவிலான காற்றுத் தூய்மையாக்கிகளாக செயல்படுவதற்காக என்று வடிவமைக்கப்பட்ட அமைப்புகளாகும்.
  • இது பொதுவாக காற்று வடிகட்டிகளின் பல்வேறு அடுக்குகளுடன் பொருத்தப் பட்டு உள்ளது. இது அவற்றில் செல்லும் காற்றில் உள்ள காற்றுத் துகள்களைத் தூய்மையாக்குகின்றது.
  • உயர்செயல்பாடு கொண்ட H14 நிலை உயர் திறன் மாசுபாட்டுத் துகள் வடிகட்டியானது புது தில்லியில் பயன்படுத்தப்பட உள்ளது.
  • இந்த வடிகட்டியானது முன்வடிகட்டி மற்றும் செயல்படுத்தப்பட்ட கார்பன் ஆகியவற்றுடன் இணைந்து காற்றில் கலந்துள்ள 99.99% நுண்மத் துகளைத் தூய்மை அடையச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்