உலகின் இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளர் 2024
April 1 , 2025
10 hrs 0 min
44
- 2024 ஆம் ஆண்டில் இந்தியா 254 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்து உள்ளதுடன், உலகின் இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது.
- உலக தேயிலை ஏற்றுமதியில் கென்யாவானது தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
- இந்தியா இலங்கையை விஞ்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
- 2024 ஆம் ஆண்டில் கென்யா 500 மில்லியன் கிலோவுக்கு மேல் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது.
- இந்தியாவின் 2024 ஆம் ஆண்டு தேயிலை ஏற்றுமதி மதிப்பு 7,112 கோடி ரூபாயாகும்.

Post Views:
44