41% இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதால், உலகின் இருவாழ்விகள் பெரும் ஆபத்தில் உள்ளன.
இது 26.5% பாலூட்டிகள், 21.4% ஊர்வன மற்றும் 12.9% பறவை இனங்களின் அழிவு அபாயத்துடன் ஒப்பிடப்படுகிறது.
இது 2004 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கடந்த மதிப்பீட்டில் பதிவாகியிருந்த 39 சதவீதத்தில் இருந்து அதிகமாகும்.
தவளைகள், சலமாண்டர்கள், நியூட்கள் மற்றும் பிற இருவாழ்விகள் உலகளவில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்கினங்களாகக் கருதப்படுகின்றன.
இவை அவற்றின் தனித்துவமான உயிரியல் மற்றும் ஊடுருவக் கூடிய தோல் காரணமாக சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக உள்ளன.
இந்த மதிப்பீடு ஆனது உலகம் முழுவதிலும் உள்ள 8,000க்கும் மேற்பட்ட இருவாழ்விகள் இனங்களின் அழிவு குறித்த அபாயத்தினை எடுத்துரைத்துள்ளது.
இந்த மதிப்பீட்டில் 2,286 இனங்கள் முதல் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டன.
ஒவ்வோர் ஐந்து இனங்களில் ஒரு இருவாழ்வி இனமானது, அழிந்து போகும் அபாயத்தில் இருப்பதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
2004 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், ஒரு சில முக்கியமான அச்சுறுத்தல் நிலைகள் 300க்கும் மேற்பட்ட இருவாழ்வி இனங்களை அழிவு நிலையினை நோக்கித் தள்ளியுள்ளன.
இவற்றில் 39% இனங்களின் அழிவிற்குப் பருவநிலை மாற்றம் ஒரு மிகப்பெரும் முதன்மை அச்சுறுத்தலாக இருந்தது.
ஒவ்வோர் ஐந்து இனங்களில் மூன்று சாலமண்டர் இனங்கள் முதன்மையாக வாழ்விட அழிவின் விளைவாக அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன.
வட அமெரிக்கா உலகிலேயே சலமாண்டர்களின் அதிகப் பல்லுயிர்ப்பெருக்கம் கொண்ட தாயகமாக உள்ளது.
2004 ஆம் ஆண்டு முதல் நான்கு இருவாழ்வி இனங்கள் அழிந்து விட்டதாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.
மேலும் 27 மிக அருகிய இனங்கள் தற்போது அழிந்து விட்டதாகக் கருதப் படுகின்றன.
அழிந்து விட்டதாகக் கருதப்படும் மிக அருகிய இருவாழ்வி இனங்களின் எண்ணிக்கையினை இது 160க்கும் மேற்பட்டதாக உயர்த்தியுள்ளது.
1980 ஆம் ஆண்டிலிருந்து செந்நிறப் பட்டியலில் 120 இனங்களின் பாதுகாப்பு நிலை மேம்பாட்டுள்ளதையும் இந்த மதிப்பீடு கண்டறிந்துள்ளது.