TNPSC Thervupettagam

உலகின் காற்றுத் தொட்டி மூலமான முதல் நடமாடும் நீர் வசதி

March 31 , 2021 1244 days 623 0
  • மைத்ரி அக்வாடெக் நிறுவனம் காற்றுத் தொட்டி மற்றும் நீர் தகவல் மையத்திலிருந்து” தனது “மேக்தூத் தீர்வு” (MEGHDOOT solution) என்பதைப் பயன்படுத்தி ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உலகின் முதல் நடமாடும்  (மொபைல்) நீர் வசதியினை வழங்க உள்ளது.
  • மைத்ரி அக்வாடெக் என்பது “இந்தியாவிலேயே உருவாக்குவோம்” (Make in India) என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு புத்தாக்க நிறுவனமாகும்.
  • மேக்தூத் (MEGHDOOT) என்றால் ‘வானின் தூதுவர்’ (Messenger of the Sky) என்று பொருளாகும்.
  • இந்த முன்னெடுப்பிற்கு GVMC (Greater Visakhapatnam Municipal Corporation  - விசாகப் பட்டின பெரு மாநகராட்சி) மற்றும் SEWAH திட்டம் (Sustainable Enterprises for Water and Health) ஆதரவளித்துள்ளது.

மேக்தூத் சொலூசன்

  • ஜல்சக்தி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வளிமண்டல நீர் உருவாக்கும் அமைப்பு இதுவாகும்.
  • இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கியாஸ்க் ஆனது காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தூய்மையான கனிமச் செறிவூட்டப்பட்ட குடிநீரை வழங்கும்.
  • அந்தக் காற்று ஏற்கனவே இருக்கும் நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் வளங்களைச் சார்ந்திராத வகையில் இருக்கும்.
  • இது நீண்ட காலத்திற்கு சுற்றுச்சூழலுக்கு ஏதுவான 100% நுண்ணுயிரியற்ற குடிநீரை வழங்கும் திறனுடையது.
  • இது தினமும் 1 மில்லியன் லிட்டருக்கும் மேல் குடிநீரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டது.
  • இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் குடிநீர் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இந்தியக் குடிநீர் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலானதாகும்.

குறிப்பு

  • நல்ல குடிநீர், தூய்மை மற்றும் துப்புரவு செயல்முறைகளின் நன்மைகள் பற்றி உள்ளூர் மக்களுக்கும் அருகிலுள்ள பள்ளிகளுக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் கியாஸ்க் ஒரு குடிநீர் அறிவு வள மையமாகச் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்