TNPSC Thervupettagam

உலகின் சிறந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவன வங்கி

July 26 , 2022 728 days 376 0
  • டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் சிங்கப்பூர் லிமிடெட் (DBS வங்கி) என்ற வங்கியானது யூரோமனி நிறுவனத்தினால் ‘உலகின் சிறந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவன வங்கி' என அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக வேண்டி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் (SMEs) இணைந்து உலகளாவியத் தொழில்துறை நிறுவனமாக இந்த வங்கி தனது நிலையை நிறுவியுள்ளது.
  • இந்த வங்கிக்குச் சமீபத்தில் வழங்கப்பட்ட இந்த உலகின் சிறந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவன வங்கி என்ற அங்கீகாரத்தினை ஐக்கிய இராஜ்ஜியத்தினைச் சேர்ந்த முன்னணி நிதி வழங்கீட்டு நிறுவனமான யூரோமனி வழங்கியது.
  • இந்த வங்கியானது 2018 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாவது முறையாக இந்த அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
  • இது பின்வரும் மூன்று விருதுகளையும் முதல் முறையாகப் பெற்றுள்ளது.
    • 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நிதிப் புத்தாக்கம்
    • ஆசியாவின் சிறந்தச் செல்வ மேலாண்மை வங்கி 2022
    • ஆசியாவின் சிறந்த  சிறு மற்றும் நடுத்தர நிறுவன வங்கி விருது 2022.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்