டிராவல் & லெய்சர்ஸின் உலகின் சிறந்த நகரங்களின் அறிக்கையின்படி, உலகின் 15 சிறந்த நகரங்களில் உதய்ப்பூர் நகரம் 3வது இடத்தினைப் பெற்றுள்ளது.
மெக்சிகோவைச் சேர்ந்த சான் மைகுயேல் டி அலென்டே மற்றும் ஓசகா ஆகிய இரண்டு நகரங்களும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
காட்சிகள் மற்றும் அடையாளங்கள், பண்பாடுகள், சமையற்கலை, நட்புத்துவம், சந்தை மற்றும் மொத்த மதிப்பின் அடிப்படையில் இத்தரம் வழங்கப்பட்டுள்ளது.
முன்பாக, 2009-ல் உலகின் பார்வையிடுவதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் இந்நகரம் முதலிடத்தில் இருந்தது. மேலும் 2017-ல் இது மூன்றாவது இடத்தினைப் பெற்றது.
உதய்ப்பூர், ஏரிகளின் நகரம் என்றும் கிழக்கின் வெனிஷ் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் தெற்கு ராஜஸ்தானில் உள்ள பைகோலா ஏரிக்கரையின் பிரம்மிப்பூட்டும் பகுதியினை இந்நகரம் கொண்டுள்ளது.