G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் மற்றும் அரசத் தலைவர்களின் 18வது உச்சி மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெறவுள்ளது.
பருவநிலை, பசுமை மேம்பாடு, எண்ணிமப் பொருளாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப் பட உள்ளது.
பல வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான மற்றும் பொருளாதார முடக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய கடன் பிரச்சனையானது இந்த பேச்சுவார்த்தையில் இடம் பெறும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
வெளிநாட்டுக் கடன் என்பது செல்வ வளமிக்க நாடுகள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற பலதரப்புக் கடன் வழங்கு நிறுவனங்கள் அல்லது வங்கிகள் போன்ற தனியார் கடன் வழங்கு நிறுவனங்களிடமிருந்துப் பெறப்பட்ட கடன் ஆகும்.
இந்த நாடுகளில், பெரும்பாலும் உலகின் தெற்கு நாடுகளில், 2011 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கடன் விகிதம் 150% உயர்ந்து, கடந்த 25 ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
ஜாம்பியா நாடானது ஜூன் மாதத்தில், "பாரீஸ் கிளப்" எனப்படும் பல்வேறு முக்கியக் கடன் வழங்கும் நாடுகளுடன் 6.3 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
அந்த நாட்டிற்கு கடன் வழங்கும் மற்றுமொரு பெரிய இருதரப்புக் கடன் வழங்கும் அமைப்பு சீனாவாகும்.
கானா, அடுத்த மூன்று ஆண்டுகளில் அதன் சர்வதேசக் கடன் தொகையினை 10.5 பில்லியன் டாலர் வரை குறைக்க உள்ளதாக இலக்கு நிர்ணயித்துள்ளது.
2024 ஆம் நிதியாண்டில் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கும் மற்ற கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பாகிஸ்தான் நாட்டிற்கு 22 பில்லியன் டாலர்கள் தேவைப் படுகிறது.
கென்யாவின் பொதுக் கடன் ஆனது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத் தட்ட 70% ஆக உள்ளது.
லெபனான் நாடானது, 2020 ஆம் ஆண்டு முதல் தெளிவான தீர்மானம் எதுவும் கிட்டாமல் திவால் நிலையில் உள்ளது.