TNPSC Thervupettagam

உலகின் பரபரப்பான சர்வதேச விமானநிலையம்

February 9 , 2018 2351 days 838 0
  • ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்நேஷனல் (Airport Council international) எனும் நிறுவனத்தினால் 2017 ஆம் ஆண்டிற்கான உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் (World’s Busiest Airport) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • சர்வதேச வான் பயணத்திற்கான வகைப்பிரிவில் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
  • ஒட்டுமொத்த விமான சேவைகள் வகைப் பிரிவில், உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக ஜார்ஜியாவில் உள்ள ஹாட்ஸ்பீல்டு-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒற்றை ஓடுதள பயன்பாட்டு வசதியுடைய விமான நிலையங்களுள் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக, மும்பையின் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் நாளொன்றுக்கு சுமார் 837 விமானப் போக்குவரத்தை கையாளுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்