நார்வேயில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், உலகின் மிகப் பழமையான ரன்ஸ்டோன் (ஜெர்மானிய இனத்தவரது வரி வடிவ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்) என்று கருதப்படும் கல்வெட்டு ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கல்வெட்டுகள் 2,000 ஆண்டுகள் பழமையானவையாகும் என்பதோடு இது ரூனிக் எழுத்து சார்ந்த புரிந்து கொள்ள முடியாத வரலாற்று காலத்தின் ஆரம்பக் கட்ட நாட்களைச் சேர்ந்தவையாகும்.
இது "இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான ரூனிக் கல்வெட்டுகளில் ஒன்று" மற்றும் "உலகின் மிகப் பழமையான காலம் கண்டறியக்கூடிய ரன்ஸ்டோன்" ஆகும்.
இதற்கு முன்பு, பழைய ரூன் எழுத்துக்கள் மற்ற பொருட்களின் மீது பொறிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டன, ஆனாலும் கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் கண்டறியப் படவில்லை.
ஆரம்பக் கால ரூனிக் எழுத்தானது, டென்மார்க்கில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பினால் ஆன சீப்பில் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டது.