TNPSC Thervupettagam

உலகின் பழமையான எழுத்து பொறிக்கப்பட்ட பாறை

January 26 , 2023 672 days 522 0
  • நார்வேயில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், உலகின் மிகப் பழமையான ரன்ஸ்டோன் (ஜெர்மானிய இனத்தவரது வரி வடிவ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்) என்று கருதப்படும் கல்வெட்டு ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தக் கல்வெட்டுகள் 2,000 ஆண்டுகள் பழமையானவையாகும் என்பதோடு இது ரூனிக் எழுத்து சார்ந்த புரிந்து கொள்ள முடியாத வரலாற்று காலத்தின் ஆரம்பக் கட்ட நாட்களைச் சேர்ந்தவையாகும்.
  • இது "இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான ரூனிக் கல்வெட்டுகளில் ஒன்று" மற்றும் "உலகின் மிகப் பழமையான காலம் கண்டறியக்கூடிய ரன்ஸ்டோன்" ஆகும்.
  • இதற்கு முன்பு, பழைய ரூன் எழுத்துக்கள் மற்ற பொருட்களின் மீது பொறிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டன, ஆனாலும் கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் கண்டறியப் படவில்லை.
  • ஆரம்பக் கால ரூனிக் எழுத்தானது, டென்மார்க்கில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பினால் ஆன சீப்பில் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்