அமெரிக்காவின் பூர்வீக தொல்லியல் தளத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமையான தாவர வைரஸ் வகையைச் சேர்ந்த ‘ஜீயா மே க்ரைசோவைரஸ் 1’ (Zea May Chryso virus 1-ZMCV1) எனும் பெயரிடப்பட்ட வைரஸை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட பழமையான வைரஸானது 750 வருடத்திற்கு முந்தையதாகும்.
இதனை அமெரிக்காவின் அரிசேனாவில் உள்ள கேன்யான் டி செல்லி என்ற தேசிய நினைவுச் சின்னத்தில் உள்ள பழமையான ப்யூப்லோன் இடிபாடுகளிடையே ஆன்டிலோப் எனப்படும் ஒரு இடத்திலிருந்து அவர்கள் கண்டறிந்துள்ளனர்.