அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கெய்ரோ நகரில் உள்ள மணற்கல் குவாரிகளில் 386 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் பழமையான புதைபடிவக் காடுகளின் எச்சங்களை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் காடானது உலகின் தற்போதைய மிகப் பழமையான காடான கில்போவா காட்டை விட சுமார் 2 அல்லது 3 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகும்.
இந்த காடானது குறைந்தபட்சம் கிளாடோக்சைலோப்சிட்ஸ் மற்றும் ஆர்க்கியோப்டெரிஸ் ஆகிய இரண்டு மரங்களையாவது கொண்டிருக்கும் என்று இந்த ஆராய்ச்சி காட்டுகின்றது.
இந்தக் காட்டில் மூன்றாவது வகை மரமும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது இன்னும் அடையாளம் காணப் படவில்லை.
இந்த மரங்கள் விதைகளை விட சிதல்களை மட்டுமே பயன்படுத்தி மீண்டும் உற்பத்தி செய்யப் படுகின்றன.