TNPSC Thervupettagam

உலகின் புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்கள்

February 5 , 2021 1321 days 1293 0
  • இரண்டாவது வருடாந்திர உலகின் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று கொண்டாடப்பட்டது.
  • புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் குறித்த 2012 ஆம் ஆண்டின் லண்டன் பிரகடனத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
  • புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களை எதிர்த்துப் போராட வேண்டி இந்தியாவும் இதில் இணைந்துள்ளது.
  • புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களானது வைரஸ்கள், புரோட்டோசோவா, பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிப் புழுக்கள் ஆகியவற்றால் ஏற்படும் வெப்பமண்டல நோய்த் தொற்றுகள் ஆகும்.
  • எச்.ஐ.வி/எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோய் போன்ற முக்கிய நோய்களுடன் ஒப்பிடப் படும் போது இவை குறைவான முக்கியத்துவம் மற்றும் சிகிச்சை ஆகியவற்றைப் பெறும் நோய்கள் ஆகும்.
  • இந்த நோய்கள் ஏழை நாடுகளில் வாழும் 1.7 பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கின்றன.
  • புருலி குடல் புண், நிணநீர் ஃபைலேரியாஸிஸ், ரேபிஸ், டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்றவை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்