TNPSC Thervupettagam

உலகின் பூர்வ குடிகளுக்கான சர்வதேச தினம் - ஆகஸ்டு 9

August 10 , 2018 2298 days 1171 0
  • உலகம் முழுவதும் ஆகஸ்டு 9ம் தேதி உலக பூர்வ குடிகளுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இதன் நோக்கம் மனித உரிமைகள், சுற்றுச் சூழல், சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாடு போன்ற பகுதிகளில் பூர்வ குடிகள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே ஆகும்.
  • 2018ம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு பூர்வகுடி மக்களின் இடப்பெயர்ச்சி மற்றும் குடியேற்றம்.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பூர்வகுடி மக்களின் உரிமைகள் என்ற தீர்மானத்தின் மூலம் 2019ம் வருடத்தை பூர்வகுடிகளின் மொழிகளுக்கான சர்வதேச வருடமாக அறிவித்துள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1994ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி தனது தீர்மானத்தின் மூலமாக ஆகஸ்டு 9ம் தேதியை உலக பூர்வகுடிகளுக்கான சர்வதேச தினமாக அறிவித்தது.
  • இத்தினம் 1982ம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டின் மீதான பூர்வகுடி மக்களின் துணை ஆணையம் மீதான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் முதல் சந்திப்பை குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்