TNPSC Thervupettagam

உலகின் பெருங்கடல்களில் ஏற்பட்ட நிற மாற்றம்

July 21 , 2023 366 days 184 0
  • சமீபத்திய ஆய்வுகளின்படி பருவநிலை மாற்றம் காரணமாக உலகிலுள்ள 56 சதவீத கடலின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • வெப்பமண்டலங்களில் குறிப்பாக தெற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள கடல் நீர் பச்சை நிறமாக மாறியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
  • பச்சை நிறக் கடல் நீரானது, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சுதலுக்கு மிகவும் அவசியமான பைட்டோபிளாங்க்டன் (தாவரக் குற்றுயிரிகள்), நுண்ணியத் தாவரம் போன்ற உயிரினங்கள் அதிகளவில் உள்ளதை இது குறிக்கிறது.
  • நீர்க் கண்காணிப்புச் செயற்கைக்கோளில் உள்ள சுமார் நடுத்தர தெளிவுத் திறன் வரைபடமாக்க நிறமாலை கதிரியல்மானியில் இருந்து (MODIS) பெறப்பட்ட தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்துள்ளனர்.
  • கடந்த இருபது ஆண்டுகளாக கடல்களில் ஏற்படும் நிற மாற்றத்தினை இது நன்கு கண்காணித்து வருகிறது.
  • ஆராய்ச்சியாளர்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுடன் கூடிய மற்றும் அவற்றின் உமிழ்வு இல்லாத சூழல்களை எடுத்துக் காட்டுவதற்காக நீண்டகாலப் போக்குகளைக் கண்காணித்து, பல்வேறு வகையிலான மாதிரிகளைப் பயன்படுத்தினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்