இது சமீபத்தில் WWF மற்றும் உலகளாவிய வனவுயிர்ப் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 உலகப் பாதுகாப்பு அமைப்புகளால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையாகும்.
இந்த அறிக்கையின் படி ஏறத்தாழ 3 நன்னீர் மீன்களில் 1 மீன் இனமானது மறைந்து போகும் அச்சுறுத்தல் நிலையில் உள்ளது.
உலகின் மறக்கப்பட்ட மீன்கள் என்ற அறிக்கையானது, நன்னீர் மீன்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள 200 மில்லியன் மக்களுக்கு முக்கிய ஊட்டச்சத்து ஆதாரத்தை அளிக்கின்றது என்று கூறுகின்றது.
இந்த தொழில்துறையானது ஏறத்தாழ 60 மில்லியன் மக்களுக்கும் அதிலும் குறிப்பாக அந்த 60 மில்லியன் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட அளவிலான பெண்களுக்கு வேலைவாய்ப்ப்புகளுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் வாய்ப்பு அளிக்கின்றது.
ஒட்டு மொத்த அளவில் நன்னீர் மீன்பிடிப்புப் பணியில் உள்ள வேலை வாய்ப்புகளானது உலக வேளாண் பணி வாய்ப்புகளில் 2.5% மற்றும் 6% என்ற அளவிற்கு இடைப்பட்டதாக விளங்குகின்றது.