TNPSC Thervupettagam

உலகின் மறக்கப்பட்ட மீன்கள் குறித்த அறிக்கை

March 11 , 2021 1230 days 605 0
  • இது சமீபத்தில் WWF மற்றும் உலகளாவிய வனவுயிர்ப் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 உலகப் பாதுகாப்பு அமைப்புகளால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையாகும்.
  • இந்த அறிக்கையின் படி ஏறத்தாழ 3 நன்னீர் மீன்களில் 1 மீன் இனமானது மறைந்து போகும் அச்சுறுத்தல் நிலையில் உள்ளது.
  • உலகின் மறக்கப்பட்ட மீன்கள் என்ற அறிக்கையானது, நன்னீர் மீன்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள 200 மில்லியன் மக்களுக்கு முக்கிய ஊட்டச்சத்து ஆதாரத்தை அளிக்கின்றது என்று கூறுகின்றது.
  • இந்த தொழில்துறையானது ஏறத்தாழ 60 மில்லியன் மக்களுக்கும் அதிலும் குறிப்பாக அந்த 60 மில்லியன் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட அளவிலான பெண்களுக்கு வேலைவாய்ப்ப்புகளுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் வாய்ப்பு அளிக்கின்றது.
  • ஒட்டு மொத்த அளவில் நன்னீர் மீன்பிடிப்புப் பணியில் உள்ள வேலை வாய்ப்புகளானது உலக வேளாண் பணி வாய்ப்புகளில் 2.5% மற்றும் 6% என்ற அளவிற்கு இடைப்பட்டதாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்