"உலகின் மிகவும் அழுக்கான மனிதர்" என்று அழைக்கப்படும் ஈரானியர் அமு ஹாஜி சமீபத்தில் உயிரிழந்தார்.
இவர் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக குளிக்காததால் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.
அழுக்காக இருப்பது தான் தன்னை இவ்வளவு காலம் உயிரோடு வைத்திருந்ததாக அவர் நம்பினார்.
அவரது தனித்துவமான இந்த சாதனையின் காரணமாக, 2013 ஆம் ஆண்டில் அவரது வாழ்க்கையை விவரிக்கும் வகையில் ‘The Strange Life of Amou Haji’ என்ற ஒரு சிறு ஆவணப் படம் தயாரிக்கப்பட்டது.