சீனாவில் ஜவ்ஷான் மற்றும் நிங்போ நகரங்களுக்கு இடையேயான தீவிர உயர் மின்னழுத்த மின்வழித் திட்டத்தின் ஒரு பகுதியாக உலகிலேயே மிக உயரமான மின்சார கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றது.
380 மீட்டர் உயரமுடைய இந்த மின்கோபுரம் லண்டனின் பிக்-பென் கோபுரத்தை விட நான்கு மடங்கு உயரமானது.
இம்மின்சார கோபுரம் கட்டிமுடிக்கப்பட்டால் இதுவரை உலகிலேயே உயரமான கோபுரம் என்றழைக்கப்பட்ட 370 மீட்டர் உயரமான சீனாவின் தமோஷன் மின்கோபுரத்தின் சாதனையை முறியடிக்கும்.