TNPSC Thervupettagam

உலகின் மிக உயர்ந்த வானிலை மையங்கள்

June 18 , 2019 1989 days 773 0
  • தேசிய புவியியல் சங்கமானது எவரெஸ்ட் சிகரத்தில் உலகின் மிக உயரத்தில் செயல்படும் வானிலை மையங்களை நிறுவியுள்ளது.
  • இது ஆராய்ச்சியாளர்கள், மலையேறுபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மலையின் நிலைமைகளைப் பற்றி நிகழ்நேரத் தகவல்களை வழங்கும்.
  • இந்தக் குழுவானது உலகின் மிக உயரத்தில் செயல்படும் இரண்டு தானியங்கி வானிலை மையங்களை பால்கனி (8430 மீட்டர்) தெற்கு கணவாய் ஆகிய பகுதிகளிலும்  (7945) அதனுடன் சேர்த்து இதர 3 வானிலை மையங்களையும் எவரெஸ்டில் நிறுவியுள்ளது.
  • போர்ட்சே (3810மீ), எவரெஸ்ட் அடித்தள முகாம் (5315 மீ) மற்றும் இரண்டாம் முகாம் (6464மீ) ஆகியவை இதர மூன்று நிலையங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்