உலகிலேயே மிக விலையுயர்ந்த கடவுச் சீட்டுகளை மெக்சிகோ கொண்டுள்ளது.
மெக்சிகோவில் 10 ஆண்டு கால கடவுச் சீட்டினைப் பெறுவதற்கான கட்டணம் 19,464 ரூபாய் ஆகும்.
இரண்டாவது மிக விலையுயர்ந்த கடவுச் சீட்டுக் கட்டணமானது ஆஸ்திரேலிய நாட்டில் வசூலிக்கப் படுகிறது என்ற நிலையில் இதற்கான கட்டணம் சுமார் 19,023 ரூபாய் மற்றும் இது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
அதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ள நிலையில் அந்நாட்டின் கடவுச் சீட்டிற்கான கட்டணம் 13,899 ரூபாய் ஆகும்.
வெறும் 1,492 ரூபாய் கட்டணத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் ஆனது, உலகிலேயே மிக மலிவானதொரு கட்டணத்தில் கடவுச்சீட்டினை வழங்குகிறது.
10 ஆண்டுகள் அளவிற்குச் செல்லுபடியாகும் வகையிலான இந்திய நாட்டின் கடவுச் சீட்டினைப் பெறுவதற்கு 1,523 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிற நிலையில் இது உலகளவில் இரண்டாவது மலிவான கடவுச் சீட்டாக உள்ளது.