TNPSC Thervupettagam

உலகின் மிகச் சிறந்த கடவுச்சீட்டு

October 16 , 2018 2137 days 660 0
  • 2018-ன் ஹென்லி குறியீட்டின்படி ஜப்பானின் கடவுச்சீட்டானது சிங்கப்பூரை முந்தி மிகவும் சிறந்த கடவுச்சீட்டாக உள்ளது.
  • இந்தக் குறியீடானது ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்-ஆல் தொகுக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் பிரத்தியேக தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.
  • 189 நாடுகளுக்கு அணுகலையுடைய சிங்கப்பூருடன் ஒப்பிடும் போது ஜப்பானின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் தற்போது நுழைவு இசைவு (VISA) இல்லாமலேயே 190 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
  • ஜெர்மனியானது 188 நாடுகளை நுழைவு இசைவு இல்லாத அணுகல்களைக் கொண்டு தென்கொரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் சம நிலையில் 3வது இடத்தில் உள்ளது.
  • டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகியவை 4வது இடத்திலும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்யம் ஆகியவை 5வது இடத்திலும் உள்ளன.
  • ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் 30 நாடுகளின் அணுகல்களுடன் கடைசியில் (106வது இடம்) உள்ளன.
  • ரஷ்யா 47வது இடத்திலும் சீனா 71வது இடத்திலும், இந்தியா 60 நாடுகள் அணுகல்களுடன் 81வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்