TNPSC Thervupettagam

உலகின் மிகச்சிறந்த புத்தாக்க பல்கலைக்கழகம்

October 15 , 2018 2138 days 623 0
  • ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன தரவரிசைகளில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் உலகின் மிகச்சிறந்த புத்தாக்க பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஸ்டான்போர்டு பல்கலைக்கழகமானது கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.
  • அமெரிக்காவின் மாசசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT - Massachusetts Institute of Technology) மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகம் ஆகியவை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.
  • இப்பட்டியலின் முதல் 100 இடங்களில் 46 பல்கலைக்கழகங்களுடன் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் எந்தவொரு இந்தியப் பல்கலைக்கழகங்களும் இடம்பெறவில்லை.
  • ராய்ட்டர்ஸின் உலகின் மிகச்சிறந்த 100 புத்தாக்க பல்கலைக்கழகத் தரவரிசையானது உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களை, அவற்றின் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தல், மேம்பட்ட அறிவியல் & ஆற்றல், புதிய சந்தைகள் மற்றும் தொழிலகங்களில் பணிகள் ஆகிய கூறுகளின் அடிப்படையில் அங்கீகரிக்கிறது.
  • இது 2015-ல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. அதிலிருந்து எந்த இந்தியப் பல்கலைக்கழகங்களும் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்