TNPSC Thervupettagam

உலகின் மிகச்சிறிய அறுவை சிகிச்சை ரோபோட்

August 22 , 2017 2689 days 1584 0
  • உலகின் மிகச்சிறிய அறுவை சிகிச்சை ரோபோட்டினை இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கைப்பேசி மற்றும் விண்வெளி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் விலை குறைவான தொழில் நுட்பங்களைக் கொண்டு இந்த ரோபோட் வடிவமைக்கப்பட்டுள்ளது .
  • வெர்ஸியஸ் என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ரோபோட் மனிதனின் கைகளைப்போல் செயல்படவும் , பல்வேறு அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • குடலிறக்கம் , பெருங்குடல் அறுவை சிகிச்சை , புரோஸ்டேட் , கண் , காது , தொண்டை தொடர்பான அறுவை சிகிச்சைகளைப் பெரிய அளவு உடல் காயங்கள் ஏற்படாமல் , சிறிய துளையிட்டு அதன் வழியாக வெர்ஸியஸ் ரோபோட்டினை உள்செலுத்தி அறுவை சிகிச்சை செய்ய முடியும் . இதனால் வலி குறைவதோடு மட்டும் அல்லாமல் , அறுவை சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் இயல்பு வாழ்கைக்குத் திரும்ப முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்