உலகின் மிகச்சிறிய கடல்வாழ் பாலூட்டி இனமான 'வாக்கிடா போர்போயிஸ்' எனப் படும் ஒருவகை கடல்வாழ் ஓங்கில்களானது அதன் ஒரேயொரு வாழ்விடமான மெக்சிகோவின் கலிபோர்னியா வளைகுடா பகுதியில் வெறும் 10 மட்டுமே உள்ளதால் அவை அழிவின் விளிம்பில் உள்ளன.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆனது (IUCN) அழிவின் ஆபத்தில் உள்ள போர்போயிஸ் இனங்களை மீண்டும் தனது பட்டியலில் சேர்த்துள்ளது.
இவை 55 கிலோ வரை எடையும், 1.5 மீட்டர் நீளமும் கொண்டதாகும்.
இது அனைத்து செட்டேசியன்களிலும் (நீர்வாழ் பாலூட்டிக் குழுமம்) மிகச் சிறியதாகும்.