March 7 , 2024
262 days
414
- பிரேசில் நாட்டின் காடுகளுள் ஒன்றில், ஒரு பட்டாணி அளவுள்ள தவளை காணப் படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இந்த ஒட்டுண்ணி போன்ற தேரையானது சராசரியாக 7.1 மில்லி மீட்டர் அளவு மட்டுமே உள்ள உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி இனமாக இருக்கலாம்.
- குட்டித் தவளையின் முதுகு பரப்பு ஆனது, வேறுபட்ட பழுப்பு நிறத்தில் நிலப்பரப்பின் நிறத்திற்கு ஒத்தவாறு சுற்றுப்புறங்களுடன் ஒன்றிவிடுகிறது.
- பிரேசிலிய ஒட்டுண்ணி வகை தேரை அல்லது பிராச்சிசெபாலஸ் புலெக்ஸ் முதன் முதலில் 2011 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.
- இது சமீபத்தில் கண்டறியப்பட்ட இரண்டாவது சிறிய தவளையை விட சுமார் ஒரு மில்லி மீட்டர் சிறியது.
Post Views:
414