“அறிவியல் முன்னேற்றங்கள்” என்ற பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கையின்படி, ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகச் சிறிய படப் புள்ளிகளைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் படப் புள்ளிகள் சாதாரணத் திறன்பேசி படப் புள்ளிகளை விட மில்லியன் மடங்கு மிகச் சிறியது.
இவற்றைப் பிரகாசமான சூரிய ஒளியில் காண முடியும். எனவே இவை ஆற்றலைச் சேமிக்கும் திறன் கொண்டது.
இந்தப் புள்ளிகள் தங்கத்தின் மிகச்சிறிய துகள்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன (அளவு-மீட்டரை விட பல மில்லியன் மடங்கு குறைவு).
இந்தப் புள்ளிகள் பாலிஅனிலைனின் மெல்லிய ஒட்டும் பூச்சுடன் பிரதிபலிப்புப் பரப்பில் சிக்கிக் கொள்கின்றன.
இந்தப் பூச்சானது மின்சாரம் செலுத்தப்பட்டவுடன் இரசாயனமாக மாறுகின்றது. இதனால் படப் புள்ளிகளானது நிறமாலை முழுவதும் அனைத்து வண்ணங்களையும் காண்பிக்கின்றது.