TNPSC Thervupettagam

உலகின் மிகப் பழமையான நானோ அமைப்புகள்

December 7 , 2020 1507 days 825 0
  • ஆராய்ச்சியாளர்கள் பண்டைய மட்பாண்டத் துண்டுகளின் “தனித்துவ கருப்புப் பூச்சுகளில்” மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நானோப் பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • கி.மு. 600 ஆம் நூற்றாண்டு என்ற காலக் கட்டத்தைச் சேர்ந்த இந்த மட்பாண்டங்கள் தமிழ்நாட்டின் கீழடியில் உள்ள அகழாய்வுத் தளத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
  • சமீபத்தில் இந்த ஆராய்ச்சியானது அறிவியல்சார் அறிக்கைகள் என்ற இதழில் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கை இந்தப் பூச்சுகள் கார்பன் நானோ குழாய்களால் (CNTs) ஆனவை என்பதை உறுதி செய்கின்றது.
  • CNTsகள் விட்ட அளவில் மீட்டரில் ஒரு பில்லியன் அளவு கொண்ட கார்பன் குழாய்கள் ஆகும்.
  • CNTsகள் ஒரு ஒழுங்கான முறையில் அமுக்கப்பட்ட கார்பன் அணுக்களின் ஒரு குழாய் அமைப்புகளாகும்.
  • இது 2600 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமைப்பைப் பாதுகாத்திட வழிவகை செய்கின்றது.
  • CNTsகள் உயர்வெப்பம், மின் கடத்துத் திறன் மற்றும் உயர் இயந்திர வலிமை உள்ளிட்ட மிகையான பண்புகளைக் கொண்டுள்ளது.
  • இதற்கு முன்பு, மனிதனால் அறியப்பட்ட மிகப் பழமையான நானோ அமைப்புகள் சிரியாவில் 16-18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டமாஸ்கஸ் தகடுகளில் கண்டறியப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்